பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பட்டி மண்டப வரலாறு

பட்டி என்பவன் விக்கிரமாதித்தன் அமைச்சன் என்பவன் வடமொழியில் எழுதப்பட்ட விக்கிரமாதித்தன் கதையில் வருபவன் . இக்கதை கதைதான்; கற்பனையில் எழுந்தது. வரலாறு அன்று.

சோமதேவ பட்டர் என்பார் வடமொழியில் கதா சரித சாகரம்’ என்றொரு நூல் எழுதினார் . அதிலிருந்து எடுத்து வளர்க்கப்பட்ட கதை விக்கிரமாதித்தன் கதை.

விக்கிரமாதித்தன் என்ற பெயரில் பெயர்பெற்ற மன்னர் அறுவர் குப்த மரபினர் தொடக்கமாகச் சாளுக்கிய மரபினர் வரை ஆண்டனர் . அவருள் ஒருவரை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது விக்கிரமாதித்தன் கதை. பன் னிரண்டாம் நூற்றாண்டில் உருவானது. -

இதில் நம்பத் தகாததும், அறிவிற்குப் பொருத்த மற்றதும், உண்மையை நெருங்காததுமாகிய பல செய்திகள் வருகின்றன. ஆனால், கவர்ச்சியும், சுவையும் நிறைந்தது.

இக்கதைப்படி சந்திர சன்மன் என்னும் ஒருவனுக்கு முறையே பார்ப்பன, அரச வணிக, தாழ்ந்த குலத்து மகளிர் நால்வர் மனைவியர். அவருள் பார்ப்பன மனைவி மகன். விக்கிரமாதித்தன், வணிக மனைவி மகன் பட்டி, விக்கிர மாதித்த மன்னனுக்குப் பட்டி அமைச்சன், திறமைமிக்க அமைச்சன் இருவரும் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழநதனராம.