பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படட்டி மண்டப வரலாறு

2 -

கையில் பிடித்துநிற்பவர் ஒருபுலவர். மிடுக்குடன் நிற்கிறார். வருவோர், போவோர் பலரும் அவரைப் பணிந்து செல்கின்றனர். புலவர் கோலத்தில் வருவோர் மட்டும் அணுகி அக்கொடியில் பொறிக்கப்பட்டுள்ள கருத்துத் தொடரைப் படிக்கின்றனர். அன்னோர் முகத்தில் ஓர் அச்சக்குறி பளிச்சிடுகின்றது.

அக்கொடி ஓர் அறைகூவல் கொடி.

அதனைப் பறக்கவிட்டு நிற்பவர் பெரும் புலவர் பலதுறைக் கருத்துக்களைக் கற்றுத் துறைபோனவர்;

கேள்வியறிவில் நிறைவு பெற்றவர்;

அவ்வறிவுப் பெருமையால் நெடுங்காலப் புகழ் பெற்றவர்;

எக்கருத்தையும் வரையறுத்து முத்திரையாக ஆணையிடும் சிறந்த ஆசிரியர்,

இன்று ஒரு கருத்தை நிலைநாட்ட அக்கருத்தைக் கொடியில் எழுதி உயர்த்தியுள்ளார். கருத்துப்போர் குறித்து உயர்த்தப்பட்ட கொடி, அது: அக்கருத்தின் வன்மையை எண்ணி அதனை மறுக்க ஆற்றலில்லாதவர்க்கு அச்சத்தைத் தரும் கொடியாக அக்கொடி பறக்கிறது.

இவ்வாறு ஒரு காட்சியாக அமைப்பதற்கு உருத்திரங்

கண்ணனார் எழுதிய பட்டினப்பாலையின் மூன்று அடிகள்

இடந்தந்துள்ளன.