பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் a T- 193

மன்றில் ஒரு சார்பாகத் தீர்ப்பளிப்பவருடைய மனை பாழாகும் என்பதை

“மன்று ஒரம் சொன்னார் மனை’ - என்றார்.

பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரது திருமணத்தில் புகுந்து வம்பு வழக்குச் செய்த சிவபெரு மானைச் சேக்கிழார் பழைய மன்றாடி போலும்” என்று கூறவைத்தார்.

ஆலமரத்தின் அடியிடமாக இருந்த மன்றம் கட்டட வளர்ச்சியில் கூடத்திற்கு வந்தது.

எனவே,

‘மன்றம்’ என்பது வழக்கைத் தீர்க்கும் சான்றோரும் பொது மக்களும் அவையாகக் கூடும் கூடத்தைக் குறிப்பதாயிற்று.

மண்டபம்

‘மண்டபம்’ என்பது கட்டி எழுப்பப்பட்ட கட்டடத்தைக் குறிக்கும் . பண்டைக்கால மண்டபம் எளிய கட்டடம் அன்று எழிலோடும் மெருகோடும் இயற்றப் பட்டது. தோற்றப் பொலிவும் ஏற்றத் திறனும் கொண்டது. பொன்னால் புனையப்பட்ட மண்டபம் தமனிய மண்டபம்” எனப்பட்டது. மணியால் அணிபெற்ற மண் டபம் “மணி மண்டபம்” எனப்பட்டது . பளிங்கு பாவப் பட்ட மண்டபம் “பளிங்கு மண்டபம்” எனப்பட்டது.