பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ா பட்டி மண்டப வரலாறு

தாரும் பட்டிமண்டபத்தார் என்று அழைக்கப்பட்டனர். இதனை முன்னர் கண்டோம். பட்டி மண்டப அமைப்பு

பட்டி மண்டபத்தின் கட்டட அமைப்பை நோக்கு வோம். இம்மண்டபத்தின் நடுவே ஒரு சிறு தனி மண்டபம் அரங்க மேடையாக எழுப்பப்பட்டிருக்கும். இது 16 தூண் களைக் கொண்டதாகும். 4 தூண்களில் சிறுஅரங்கமாகவும் அமையும் . 16 தூண்களாயின் நடு நான்கு தூண்களின் இடைத்தளம் மேலும் சற்று உயர்ந்த மேடையாக உயர்த்திக் கட்டப்பட்டிருக்கும். 4 தூண்களாயின் அவற்றின் இடைத் தளம் இவ்வாறு மேடையாக்கப்பட்டிருக்கும் . இந்த நடு மேடையில் சொற்போராளர் இருந்தோ நின்றோ சொற் போரிடுவர், இஃதே பட்டி அரங்கமாகும் . இந்நடு மேடை யைச் சுற்றியுள்ள சுற்று மேடையில் நடுவரும் பட்டி மண்டபத்தாரும் சான்றோரும் அமர்வர் . இத்துண்கள் மேல் கருங்கல் பாவப்பட்ட தனிக்கூரை அமைந்திருக்கும். இவ்வாறான அரங்கப் பகுதியே நூல்களை ஆராயும் அரங்கம் ஆகும் இவ்வரங்கமே நூல்கள் அரங்கேற்றப் படும் அரங்கமாகும் புலவர்களுக்குப் பெருஞ்சிறப்பும் பட்டமும் பரிசும் வழங்கும் மன்னவன் இவ்வரங்கிலேயே அச்சிறப்பான நிகழ்ச்சியை நிகழ்த்துவான் பட்டினப் பாலையை எழுதிய உருத்திரங்கண்ணனார்க்கு பரிசாகப் பொன்னை வழங்கிய சோழன் கரிகாலன் இத்தகைய 16 கால் மண்டபத்திலேயே அச்சிறப்பைச் செய்ததாகக் கல்வெட்டு ஒன்று அறிவிக்கின்றது.