பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 | பட்டி மண்டப வரலாறு


அழைக்கப்படுவர் மணிமேகலையில் இந்திர விழாவை அறிவிக்கும் அறிவிப்பில்,

“ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபத்துப் பாங்கறிந்தேறுமின்”

எனப் பட்டிமண்டபத்திற் பங்குகொள்ளுமாறு அழைக்கப் பட்டதை முன்னரும் அறிந்தோம் . இங்கு “பாங்கறிந்து ஏறுமின்” என்ற குறிப்பால் பட்டி மண்டபம் ஏறும் மேடை அமைப்பை (அதாவது) அரங்கைக் கொண்டது என்பதை

யும் உணர முடிகின்றது.

இத்தகைய பட்டி மண்டபம் திருக்கோவில்களிலும் அமைந்திருந்தது . அங்கு சமயத்துறைச் சான்றோர் கூடிச் சமயத்துறை நூல்களைப் பயின்று ஆராய்ந்தனர் . அத் தகைய பட்டி மண்டபம் ஒன்றில் தாம் இடம்பெற்றதை மாணிக்கவாசகர் பாடினார் . அஃதும் இரண்டிடத்தில் அமைந்த அரங்க மேடைக்குப் படியில் ஏற்றியதையும், பதவியில் ஏற்றியதையும் அடுக்கிக் காட்டுகின்றது.

தஞ்சை மாமன்னன் இராசராசன் தான் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் ஒரு மண்டபத்தில் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சி நிகழ ஏற்பாடு செய்து அதற்கோர் அறக்கட்டளையும் அமைத்ததை அவன் கல்வெட்டு காட்டுகின்றது . இஃதும் பட்டி மண்டப வரலாற்றில் ஒரு குறியாகும்.

இவ்வாறாக,