பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 H பட்டி மண்டப வரலாறு

...

ஆ) பிற்கால விளைச்சல்

சங்க கால ஆட்சியில் பட்டி மண்டப விளைச்சல் மணிக்கதிர் அறுவடையாக இருந்தது . பெருந்தகவான அறிவு மணி உள்ளிடாக அமைந்தது. சற்றுக் கீறலும் கரும் புள்ளியும் ஒன்றிரண்டு பதர்களாக அமைந்தன.

சமயக் கால ஆட்சியில் சொற்போர் பயிராயிற்று சமணப் பயிர்கள் சில வளப்பயிர்களாகவும் பல முடுகிய சூறைக்காற்றால் பகையும் பழியும், கலவரமும் நிலவரங் களாகவும் ஆயின, பதர் சூழ்ந்தது.

17, 18-ஆம் நூற்றாண்டுகளில் பட்டி மண்டப நிலை என்ன? மணிக்கதிரா? வெறும் பதரா? அல்லது மழை வெள்ளத்தால் அழுகலா?

முச்சந்திப் பட்டி மண்டபம்

பதினேழாம் நூற்றாண்டளவில் தமிழ் மண்ணில் ஒரு பாட்டுப் பட்டி மண்டபம் தோன்றியது. அதற்கு இலாவணி (லாவணி) என்று பெயர். அது நிகழும் விழாவைக் காமன் (பண்டிகை) விழா என்பர் . இதன் விரிவாகக் காமவேள் எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு கட்சியினரின் பாடல் போர் நிகழும்.

இது சமயக் கதை கொண்டது.