பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 215

மணிமேகலைக் காப்பியம், குறித்தமைபோன்று பற்றா மாக்கள் தம்முடன் செற்றம்கொண்டு கலவரம் முட்டுவதற்கு நேரம் பார்த்துக் காத்திருப்பர் பலர் பாடுவோர் சொற்களில் சூடு பிடிக்கும். அந்தந்த இடத்திற் கேற்பப் பாட்டைக் கட்டிப் பாடுவர் . சூடு சூட்டுக் கோலாகிக் கலவரமாகிக் கைகலப்பு நேரும் அடிதடியாக வளர்ந்து குத்து வெட்டிலும் முடியும் (என் பதினோராம் அகவையில் மன்னார்குடி நகரிலுள்ள உடையார் தெருவில் நிகழ்ந்த ஒரு காமன் விழாவில் மூண்ட கலவரத்தில் ஒருவர் வெட்டுண்டு இறந்ததைக் கண்டுள்ளேன்.) கலவரம் நேராத காமன் விழா அந்த நாளில் சிறப்போடு நிகழ்ந்ததாகக் கருதப்படமாட்டாது.

இக்கலவரத்தின் ஊடே வைக்கோல் சுற்றி வரட்டி கட்டிய பேய்க்கரும்பு கொளுத்தப்பட்டு எரிக்கப்படும். மன்மதன் எரிக்கப்பட்டதாகப் பொருள். இதுதான் தீர்ப்பு. நடுவர் சொல்லாத வன்முறைத் தீர்ப்பு.

எரித்த இடத்தில் மறுநாள் காமனுக்குப் பால்தெளி நீர்க்கடன் நிகழும். இதன் முன்னறிவிப்பாகத்தான் கடலை யும் மொச்சையும் தேங்காயும் படைக்கப்பட்டதைப் பாட்டில் கண்டோம்.

“கூறு உன்னாலே சாயுமோசொல் போகமின்றிச் சீவவிர்த்தி கூட்டுக்கேகின. தென்றிரே வாது. வாது குதற்க வாதம் பேசவந்தாய் தற்க சாத்திரமல்லாமல் குட்டிப் புலவர்களே என் மீது மீது"