பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 217

எரியாத கட்சிப் பாடல்களில் தஞ்சாவூர் முத்தமிழ் வித்தவான் பாப்புதாசர் பாடல்கள் அக்காலத்தில் புகழ் பெற்றவை.

“டேப்பு குமாரதாசு” என்பார் இப்பாடல்களைப் பாடுவதில் வல்லவர் பாப்புதாசு பாடல்கள் அமைந்த எரிந்தகட்சி வினா விடை என்னும் நூலில் இருகட்சிக் கருத்துக்களும் காணப்படும். -

எரியாத கட்சிக்காரர்,

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்

அறியச்சொல் என்தன் முன்னே, முன்னே” என்றுவினவ எரிந்த கட்சிக்காரர் நேரான விடை சொல்ல இயலாமல்,

“அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்தவிதம்

கொழுக்கட்டை தின்னதினால் அண்ணே, அண்னே” என்பார் . இரு கட்சிக்காரருக்கும் இலாவணிப் பயிற்சி தரும் ஆசிரியர்கள் இருந்தனர். அவர்தம் வழிவழியினராக இலாவணி பாடுவோர் இப்போதும் ஆங்காங்கு வாழ் கின்றனர். ஒர் ஊதியத்தொகை பேசிக்கொண்டு பைங்குனித் திங்களில் நிகழ்ச்சிக்குப் போவது வழக்கமாக உள்ளது இஃது ஒரு தொழில் ஆகியது.

இப்போதும் அரசியலில் ஒவ்வொன்றிற்கும் மாறி மாறிப் போட்டியாக விடை சொல்வதை விரும்பாதோர், ‘நான் லாவணி பாட விரும்பவில்லை என்பதை அறிவோம்.