பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 5

லிருந்தும் உணரமுடிகின்றது. பத்துப்பாட்டிற்கு முன்னர் முழுநூல்களாக இலக்கிய நூல்கள் கிடைக்கவில்லை. சிதறலாகச் சில, பலவே கிடைத்துள்ளன. அவற்றில் இங்குக் கண்ட பட்டிமண்டபக் கருத்துப்போர் நிகழ்ச்சிக்குப் பக்கச்சான்றாகப் பல செய்திகள் கிடைத்துள்ளன . அச் செய்திகள் கருத்துப்போருக்குரிய நெறிகளாக அமைந் துள்ளன . அவற்றைப் பின்னர் நெறிகளை ஆயும்போது காணலாம்.

உரையாசிரியர் சான்றா?

கண்ட இரு நூல்களிலும் பட்டி மண்டபம் என்னும் சொல்லே இல்லை. உரையாசிரியர்கள்தாம் கையாண் டுள்ளனர். நிகழ்ச்சிகளையும் உரையாசிரியர்கள் எழுத்தைக் கொண்டே அறியமுடிகின்றது.

இவ்வுரைகள் மூல நூல்களின் காலத்தைநோக்கமிகப் பிற்பட்டவை.

இவ்வுரைகளைத் தந்த நச்சினார்க்கினியர் கி. பி. 14 ஆம் நூ ற்றாண்டில் வாழ்ந்தவர் . பட்டினப்பாலையும், மது ை த்சியும் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுந்தவை. ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டவை உரைகள் . அத்துணை முற்காலத்துக் கருத்துக்களை உரை கள் அப்படியே வெளிப்படுத்தியனவாகக் கொள்ளலாமா? அவற்றை மூலத்தின் உண்மை விரிப்புகளாகக் கொள்ள லாமா? கொள்ளலாம்.