பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 221

கி பி , 1900 ஆண்டில் தம் அவ்ையில் சைவ, திருமாலிய, நான்மறைக் கோட்பாட்டிய, இசுலாமிய, கிறித்துவப் பெருமக்களைக் கூட்டினார். சிறப்பாகச் சைவத் திரு சோமசுந்தர நாயகர் அழைக்கப்பட்டிருந்தார். அவை யில் சேதுபதி அவர்கள், வந்துள்ள சமய அறிஞர்கள் தம்தம் சமயக் கோட்பாடுகளை அவையில் வைக்கலாம் தடை விடைகளால் கருத்துப் போரிடலாம்; இறுதியில் காணப் படும் முடிவு தீர்ப்பாகும் வென்றவர் பொன்னாடை போர்த்திப் பாராட்டப்படுவார்; பரிசாக இரு கைகளுக்குத் தங்கத் தோடா அணிவிக்கப்பெறுவார் உருவா 5000/கொண்ட பொற்கிழி வழங்கப்பெறுவார் என்று அறிவித்தார் எவரும் தாமாக முன்வரவில்லை . சேதுபதி அவர்கள் சைவத் திருவாளர் நாயகர் அவர்களைச் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைக் கூறுமாறு வேண்ட அவரும் நீண்ட சொற்பொழிவாற்றினார் சொற்பொழிவாயினும் பிறன்கோள் மறுத்தல், தன்கோள் நிறுத்தல் முதலியவற்றால் தாமே கருத்து மாற்றங்களைக் கூறினார்.

மீண்டும் சேதுபதி அவர்கள் நாயகரின் சைவ சித்தாந்தக் கருத்துக்களை அவையிலுள்ளோர் எவரும் மறுக்கலாம் என்று அழைத்தார் . எவரும் முன்வராத நிலையில் சைவ சித்தாந்தமே வென்றதாக அறிவித்தார் . இஃது ஒருதலைத் தீர்ப்பாகவே அறிவிக்கப்பட்டது. நாயகர் வர்கட்கு பாராட்டையும் பரிசுகளையும் வழங்கி வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்னும் பட்டத்தையும் வழங்கினார்.