பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பட்டி மண்டப வரலாறு

இது முழு நிறைவான பட்டி மண்டபம் அன்று. ஒருதலைக் கருத்துப் போராக அமைந்தது . எதிர்ப்போர் இல்லாத கருத்து விளக்கத்தில் நடுவர் தீர்ப்பு அமைந்தது. அஃதும் நடுவரது தனி ஆர்வக் கருத்தாக அமைந்தது. வந்தமைந்த அவையோர் அரசர் கருத்தறிந்து தம் கருத்தை வைப்பது வீணாகுமோ என்று ஐயங்கொண்டும் வாளா இருந்திருப்பர் . இது சமயம் சார்ந்த பட்டி மண்டபத்தின் ஒருமுனை நிகழ்ச்சி. -

அருட்பா மருட்பா கருத்துப்போர்

வள்ளலார் இராமலிங்க அடிகள் பாடிய தெய்வப் போற்றிப் பாடல்கள் அருட்பா என்று சிறப்புப்பெயர் சூட்டப்பெற்றுநூலாகவும் வெளிவந்தன. தேவாரமூவரும், மணிவாசகருமே சிவனருள் பெற்றுப் பாடியவர்கள். எனவே, அவையே அருட்பாக்கள் . மற்றவை பாடல்களே என்றும், குறிப்பாக வள்ளலார் மருளியே பாடியுள்ளார்; எனவே, மருட்பாவே’ என்ற தடைக் கருத்து என்றும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களால் எழுப்பப் பட்டது. அவர்தம் மாணவராம் புலமைத்திரு கதிரைவேற் பிள்ளையவர்கள் தம் ஆசிரியர் ஆணையை ஏற்றுத் தமிழ் நாட்டில் நகர் நகராக அருட்பாவை எதிர்த்துச் சொற்பொழி வாற்றினார்.

இதனை விரும்பாத பலர் திரு . வி க அவர்கள் துணையுடன் மறைமலையடிகளாரை அணுகினர்.