பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் 225


பெற்றவர். இவர் மதுரைத் தமிழ்சங்க நான்காம் ஆண்டுவிழாத் தலைவராக அமர்த்தப் பெற்றார் சிறப்புச் சொற்பொழிவாளராக நிறை தமிழ்ச் செம்மல் மறைமலை யடிகள் அமைந்தார்.

அக்காலத் தமிழ்ப்புலமைச் செம்மலரான திரு நாராயண ஐயங்கார் (செந்தமிழ் இதழாசிரியர்) இரா இராகவ ஐயங்கார், மு. இராகவ ஐயங்கார், இராசகோபால இராசாளியார், உ. வே. சாமிநாத ஐயர் முதலிய பெரும் புலவர்கள் அவையை அணிசெய்தனர்.

இஃது, ஆண்டு விழாச் சொற்பொழிவுக் கூட்டமாகத் தான் துவங்கியது . ஆனால், தலைவரின் முன்னுரைப் பொழிவு பட்டி மண்டய நிகழ்ச்சியாக மாற வாய்ப்பு தந்தது . -

தலைவரவர்கள் அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலிய சான்றோர் அனைவரும் ஆரிய இனத்தவர் . அவர்கள் வழங்கிய நூல்களே தமிழை வாழ வைக்கின்றன . எனவே, ஆரியர்க்குத் தமிழர் கடமைப் பட்டவர் என்று பேசினார் . அக்காலத் தமிழ்ப் புலவர் கூட்டங்களில் இக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன வாக இருந்தன.

இந்த அவையில் தமிழ் ஆய்வும், தோய்வும், வடமொழித் தெளிவும் நெளிவும் ஆங்கில அறிவும் செறிவும் நிறைந்த தனித்தமிழ்ப் பெருமகன் மறைமலையடிகளார் பொழிவு, புரட்சிக் கருத்துக்களை நிரப்பியது.