பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 227

மறைமலையடிகளார் பதிவாக்கிய இப்பட்டி மண்டபம் தமிழர்க்கொருபெருமை எனலாம்.

தீர்ப்பில் விளைந்த தீ பரவட்டும்

இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையின் பதிவுகள்; அவை மக்கள் வாழ்வின் இயக்கத்திற்கு அவர்களை இயங்க வைக்க வேண்டும் . அவ்வாறு இயங்க வழிகாட்டாதவை இலக்கியங்கள் அல்ல, மாறாகக் கலக்கும் இயங்கள் கலக்கி

யங்கள்.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி அவர்கள் தமிழ் இலக்கியங்களில் நேர்ந்த கலக்கியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் . அனைத்துப் புராணங் களும் அவற்றுள் அடங்கும். ஆயினும், இரண்டு நூல்களை அவற்றின் அறிகுறிகளாகக் கண்டு அவற்றைக் கண்டனம் செய்தார் . அக்கண்டனத்திற்குரியவையாகக் கம்பராமா யணமும், பெரியபுராணமும் அறிவிக்கப்பட்டன.

தமிழ் இனத்தவரை அரக்கர் என்றும் குரங்குகள் என்றும் இழிவுபடுத்தி, இராமன் என்னும் வடபுலத்து ஆரிய அரசகுமாரனைக் கடவுள் அவதாரமாகக் காட்டித் தமிழர்களை வணங்கவைத்துத் தாழ்த்தியது கம்பராமா யணம் என்றும், நம்பத்தகாதனவும் அறிவிற்குப் பொருந் தாதனவும் ஆகியவற்றைக் கடவுள் அருள் என்னும் கவர்ச் சிப் போர் வைக்குள் வைத்துத் தமிழரைத் தாழ்த்தியது பெரியபுராணம் என்றும், பெரியார் அறிவித்தார்.