பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 IT பட்டி மண்டப வரலாறு

உரையாற்றினார். அவர் தொடக்கத்திலேயே ‘ஆரியர், திராவிடர் என்று பிரிவு இல்லை என்றதை எதிர்த்து கூட்டத்தினர் ஆரவாரம் செய்தமையால் அரைகுறையாகத் தம் பேச்சை முடித்தார்.

பிள்ளையவர்கள் கருத்தை மறுத்து அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார் . ஆணியறைந்தாற் போன்று அழகு தமிழில் நயம்பட உரையாற்றினார்.

நடுவரவர்கள், தீயிடக்கூடாது என்று உரையாற்றிய பிள்ளையவர்கள் மறுமுறை பேசலாம் என்று சொன்னதை வைத்து இப்போது என் கருத்தைத் தீர்ப்பாகச் சொல்லு வதற்கில்லை. பின்னொரு நிகழ்ச்சியில் சொல்வேன்’ என்று தீர்ப்பை ஒற்றிவைத்தார். -

பட்டி மண்டபம் அன்றளவில் முடிந்தது. பாங்குடன் பட்டிமண்டபம் நிகழ்ந்தது. தமிழ்ச்சுவை யும், பெருந்தகவும் இருசாராரிடமும் அமைந்தன . தீர்ப்பு தான் அமையவில்லை என்றாலும் அறிஞர் அண்ணாவின் கருத்தேமேவிநின்றது.

கால ஆட்சியின் பட்டி மண்டப வரலாற்றில் இப் பட்டி மண்டபம் ஒரு புரட்சி விளைச்சல்,

நடுவர் அறிவிப்பின்படி இப்பட்டி மண்டபம் தொடரவில்லை. வேறு நிகழ்ச்சியாகத் தொடர்ந்தது.

இதற்குக் களமாக, சேலம் செவ்வாய்ப்பேட்டைத் தேவாங்கர் பாடசாலை மண்டபம் அமைந்தது.