பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல 235

ஒத்துப் பேசிய ஒரு மாணவரும் சட்டம் பயின்றவர்கள் . சட்டச் சார்பில் இப்பட்டி மன்றம் நிகழ்ந்தது குறிக்கத் தக்கது. வழக்காடிய நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் உரையின் தொடக்கத்தில்

“எதிர்க்கட்சிக்காரர் என்னென்ன காரணம் கூறுவார்

என்பதை யோசித்துப் பார்த்து அதற்குச் சமாதானம் தேடிக்கொண்டு, பிறகே என் கட்சிக்கான ஆதாரம் தேடுவது வழக்கம்’

என்று தம் வழக்கறிஞர் தொழிலின் முன்னேற்பாட்டைக் கூறினார்.

இதனைத் தொல்காப்பியம்

“மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்”

என்றது.

மாற்றுக் கருத்துடையவர் வினாவை அறிந்து அதற்கு மாற்றமான விடையையும் முன்னரே கருதிப் பார்த்துக் கொள்ளுதல் என்பது இதன் கருத்து தொல்காப்பிய வல்லுநரான பாரதியார் அவர்கட்கு இம்முறை இயல்பில் அமைந்திருந்ததை அறியலாம் . இஃதும் ஒரு பட்டி மண்டபக் குறிப்பாகின்றது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதற்பட்டி மண்டப நிகழ்ச்சியின்போது தம் உரையில். ஓர் உத்தியைக் கை யாண்டார்.