பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 237

ஒடுக்கும் செயல் வெளிப்படுத்தப்பட்டது. இலக்கியத்தில் பகுத்தறிவு புகுந்து நலம் பயக்கும் கருத்துக்கள் விரிந்தன. இது தீர்ப்பின் பதிவால் ஏற்பட்ட பயன். இத்துடன் கம்பராமாயண ஆர்வலர் முனைப்பு கொண்டு கம்பரைப்பரப்பவேண்டும்என்று எழுந்த பயனும் மாற்றுப் பயனாக விளைந்தது. இந்த மாற்றுப் பயனும் தீபரவட்டும் குறிக்கோளுக்குச் சார்பாக முடிந்தது என்பதைப் பின் காண்போம். - - -

கம்பராமாயணத்தைத் தாக்கும் நோக்கில் பட்டி மண்டபமும் இடம் பெற்றமை போன்று கம்பராமா யணத்தைப் பரப்பும் நோக்கில் பட்டிமண்டபம் இடம்

பெற்றதையும் இதனைத் தொடர்ந்து நோக்கவேண்டும்.

கம்பன் கழகக் கதிர்மணி விளைச்சல்

பிற்காலப் பட்டி மண்டப வரலாற்றில் ஒரு வைர முத்திரை காரைக்குடி கம்பன் கழகப் பட்டி மண்டபம்.

இதன் முழுப்பெருமையும் காரைக்குடி திரு. சா. கணேசன் அவர்களையே சாரும். அவர் காந்தியக் கொள்கையர். அதற்குச் சமமான கம்பனின் கன்னித் தமிழ்க் கொள்கை யர் . கம்பன் பால் உணர்வும் உயிரும், ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். தம்மைக் ‘கம்பன் அடிப்பொடி’ என்பதில் பூரித்தவர் காரைக்குடியில் கம்பன் கழகத்தை நிறுவினார் . தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கனார், இரசிகமணி டி. கே. சிதம்பரநாதமுதலியார் முதலிய கம்பச்