பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பட்டி மண்டப வரலாறு

மேல் முறையீடு செய்யலாம். அதற்கென மேல் முறையீட்டு

மன்றம் அமையும் அதில் அணித்தலைவர்கள் மட்டும்

சொற் போரிடுவர். இதற்கென வேறொரு நடுவர் அமர்ந்து

உரிய தீர்ப்பைச் சொல்வார் . இவ்வாறு ஒரு பட்டி

மண்டப வளர்ச்சி உண்டாயிற்று.

வழக்காடு மன்றம் -

இதன் அடிப்படையில் வழக்காடு மன்றம் தோன்றி

யது. ஒரு நடுவர் தலைமையில் திறனமைந்த பொழிவாளர் இருவர் வழக்காடுபவராக அமைவர்.

“வாலியை இராமன் மறைந்திருந்து

கொன்றது குற்றமே” என்று ஒருவர் குற்றம் சாற்றி வழக்கைத் தொடங்குவார் குற்றங்களை அடுக்குவார் குற்றங்களை மறுப்பவர் ஒவ் வொன்றும் தவறென்பார் . இவ்வழக்கை நடுவர் ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பார்.

நடுவர் கூறப்பட்ட குற்றங்களில் சான்று அற்றது . அற்றவை என்று ஒன்றிரண்டைத் தள்ளுபடி செய்வதும் உண்டு வழக்கைத் தொடர்ந்தவர் ஒவ்வொரு குற்றமாகச் சான்றுடன் நிறுவ முனைவார் . மறுப்பவர் சான்றுடன் ஒவ்வொன்றாக மறுப்பார்.

நடுவர் இறுதியில் அலசி ஆராய்ந்து உரையாற்றித் தீர்ப்பளிப்பார். :

‘எம வாதம்