பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [...] 241

வழக்காடு மன்றம் பட்டி மண்டப வளர்ச்சிதான். என்றாலும் நாட்டு நடைமுறையில் சமுதாயவியலிலும், குற்றவியலிலும் வழக்குகள் அறமன்றங்களில் நிகழ்ந்து வந்தன . அவற்றில் சட்டம் பயின்ற வழக்கறிஞர் வாதிக் காகவும், பிரதிவாதிக்காகவும் வாதாடினர்.

இம்முறையில் ஒரு சமய வழக்காடு மன்ற நூல் 1927 இல் வெளிவந்துள்ளது. நூலின் பெயர் எம வாதம் இதன் ஆசிரியர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த திரு எசு. கே. இராமசாமி நாடார். :

சமயத்துறையில் மார்க்கண்டேயன் கதையை அறிவோம் . அதில் எமன் கொல்லப்பட்டு உயிர் அருளப் பெற்றான். அவன் தான் கடமையாற்றும் போது சிவபெரு மான் தன்னைத் தடுத்துக் கொன்றது.குற்றம் என்று வழக்குத் தொடுக்கிறான் . வழக்காடு மன்றத்தில் வழக்கு நடுவர் சதாசிவனார். வாதிக்காகவழக்காடுபவர் துருவாசமுனிவர். சிவபெருமானும் மார்க்கண்டேயனும் குற்றம் சாற்றப் பட்டவர்கள். இருவர்க்கும் முறையே வேதவியாசரும், வசிட்டரும் வாதிட்டனர் . இந்நிகழ்ச்சியின் காலமாக துவாபரயுகம் 2017 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 30ஆம் நாள் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு சிவபெருமான் சார்பாகத் தள்ளுபடி செய்யப் பட்டதாயிற்று. . 4. c

இஃதொரு புதுமையான வழக்காடுமன்ற நூல். பட்டி மண்டப வரலாற்றில் இஃதும் இணைந்து கொள்கிறது. இஃதொரு எழுத்து வழக்காடு மன்றம்.