பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் T 245

அறிஞர் அண்ணாவின் நெறிகொண்ட கலைஞர்

மு கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது இக்கம்பன் கழகத்திற்கு மணிமண்டபம் எழ உதவினார்; நிறைவேறியதும் திறந்துவைத்தார்.அறிஞர் அண்ணாவின் கம்பக் கொள்கையின், தன்மான இயக்கத் தந்தையின் எழுச்சிக் கோட்பாட்டின் வெற்றிச் சின்னமாகக் கம்பன் மணி மண்டபம் எழுந்து நிற்கின்றது . கலைஞர் இதில் ஈடுபாடு கொண்டதும் பொருத்தமாகியது.

மாறுபட்டன போலத் தோன்றிய இரண்டும் விளைச்சலால் ஒத்த பயன் தந்தன. இது பட்டி மண்டப வரலாற்றில் ஒரு புதுப்பதிவாகும்.

சென்னையில் பட்டி மண்டபம்

பட்டி மன்றம் என்னும் பெயரில் சென்னையில் ஒர் அமைப்பு தோன்றியது . சென்னை பாரிமுனையில் கிறித்துவ இளைஞர் சங்கம் (Y.M.C.A) உள்ளது . இரண்டு மாடிகள் அமைந்த பெருங்கட்டடம் அதற்குள்ளது. அதில் பலவகைத் தமிழ் ஆர்வலர் கூடி “பட்டிமன்றம்” நிறுவினர். தமிழ்ப் பேராசிரியர் பலர் கருத்துரையில் பட்டி மன்றம் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பெயர் தேர்ந் தெடுக்கப்பட்ட போது கருத்துப் போரிடும் பட்டி மண்டபக் கருத்து மேலோங்கி நிற்கவில்லை.

“கல்வி பயில்களம் பட்டி மண்டபம்"