பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பட்டி மண்டப வரலாறு

இதனை ஒரு பயனுள்ள பட்டி மண்டபம் எனலாம். தமிழகத்தில் பட்டி அடைமொழியுடன் அமைந்த மன்றம் இஃதொன்றே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாளைய இதழ்கள் சில இந்நிகழ்ச்சியைப் பாராட்டி எழுதின. அம்மன்ற உறுப்பினர்.ஆர்வலரிடையே தமிழ் உணர்வைத் தூண்டிய பயன் விளைந்தது. அப் போது அதன் செயலர் திரு. கெ. பக்தவத்சலம் என்பார். மரபுவழிப் பட்டி மண்டபம்

பழமையைக் காட்சிப்படுத்திக் கருத்துரைக்கும் புதுமை நிகழ்ச்சியாக நாகபட்டினத்தில் ஒரு பட்டி மண்டபம் நிகழ்ந்தது.

நாகையில் உருவான நாகைத் தமிழ்ச் சங்கம் பல் வகைத் தமிழ்ப்பணிகளுடன், கல்விப்பணியும் குறிப்பாக இலக்கியப் பொதுக்கூட்டப் பணியையும் செய்தது. அவற்றில் ஒன்று மரபு வழிப் பட்டி மன்றம்’ என்று அறிவித்து நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

பட்டி மண்டப வரலாற்றில் அமைந்த நிகழ்ச்சிகளில் முற்கால இடைக்கால நடைமுறைகளை அறிமுகம் செய்து கருத்துப் போரிடுவதாக இது அமைந்தது . பண்டை மரபுப்படி இது நடைமுறைப்பட்டதால் மரபுவழிப் பட்டி மன்றம் என்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பிற்கு வாக்களிக் கும் முறை சோழர்காலக் குடவோலை முறைப்படி அமைந்தமை. இதன் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது . அவையோர் தீர்ப்பும் தனியே நிகழ்ந்தமை மற்றொரு சிறப்பு.