பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் I 257

பெருமக்களும் கூடியிருந்த பேரவையாக அது அமைந்தது. திருக்குறளார் வீ முனிசாமி அவர்கள் நடுவராக அமைய புலவர் கீரன் அவர்கள் மனநலமே சிறந்தது என்னும் அணிக்குத் தலைவராகவும், இனநலமே சிறந்தது என்னும் அணிக்கு இதனை எழுதுபவர் தலைவராகவும் கருத்துப் போரிட்டனர். மனநலமே சிறந்தது என்பது தீர்ப் பாயிற்று.

தமிழ்நாட்டில் இலக்கிய விழா என்றால் பட்டி மண்டபம் உண்டா என்று மக்கள் வினவும் அளவில்

பெருகியது.

வெளி மாநிலங்களில் விளைச்சல்

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள வெளிமாநிலங்களிலும் தமிழ் விழாக்களில் பட்டிமண்டபம் தோன்றிற்று. கன்னட நாட்டுப் பெங்களூரில் தமிழ் இலக்கிய மன்றம், பெங்களுர்த் தமிழ்ச் சங்கம் ஆண்டு விழாக்களிலும், மலையாள நாட்டு செங்கணான்சேரி திருவள்ளுவர் மன்ற விழாக்களிலும், பம்பாய் திருவள்ளுவர் மன்றம், தமிழ்ச் சங்கத்திலும் பட்டி மண்டபம் இடம் பெற்றது . அண்மையில் அந்தமான் தீவிலும் பட்டி மண்டபம் புகுந்தது.

இவ்வாறு தகுதியுள்ள மன்றங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், மாநாடுகள், கல்லூரிகள் பொது நிகழ்ச்சி களில் பட்டி மண்டபம் நிகழ்ந்தமை ஏறத்தாழ 1960 வரை