பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [...] 259

அகவல், விருத்தம், சந்தப்பாக்கள், இடையில் வெண்பா, கண்ணி, தாழிசைகளில் கருத்துப் போர் நிகழ்ந் தது. எழுதிக்கொண்டு வந்து படித்ததுடன் அவ்வப்போது வாய்மொழியாகவே பாடல்கள் பிறந்தன. சுந்தரர் இருவரும் தேர்ந்த கவிஞர்கள் சொ. செ. மீ சுந்தரம் நயம்படப் பாடுவதில் வல்லவர். முருகுசுந்தரம் மெருகுபடப்பாடுவார். மற்றையோரும் குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் தமிழ்க் குடிமகன் பாடல் கருத்தாழமானது. -

நடுவர் தமிழண்ணல் தம் இயல்பான கவிதைத் திறத்தால் தீர்ப்பளித்தார். தீர்ப்பு காதலே’ என்பது.

திருவாரூரில்

திருவாரூரில் தமிழ்த் தென்றல் திரு . வி. க மார்பளவு வெண்கலச் சிலைநாட்டுவிழா நிகழ்ந்த போது சிலையைத் திறந்து வைத்து அந்நாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பொழிவாற்றியமையால் பல்லா யிரவர் கலந்துகொண்ட பெருங்கூட்டமாக அமைந்தது .

அவையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதனார், பல்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், மொழிஞாயிறு ஞா. தேவ நேயப் பாவாணர், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம், அந்நாள் உணவு - கூட்டுறவுத்துறை அமைச்சர் மன்னை நாராயணசாமி, எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன், பேராசிரியை இராசேசுவரி அமர்ந்திருந்தனர் . இப்