பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 263

இது எனவேண்டா என்பது ஒருகருத்து

காட்சியளவையான் உணரப்படும் என்பது மறு

கருத்து.

இது என வேண்டா என்னும்அணியில் புலவர் சீனி. சண்முகம், புலவர் அ. மு. அ காதிர் புலவர் இரா அரங்கராமானுசம், புலவர் சீனி. கோவிந்தன், புலவர் க. இரா. நாகராசன், புலவர் இர. சண்முகவடிவேலு என ஐவர் பங்கேற்றனர். - -

‘காட்சியளவையான் உணரப்படும்’ என்னும் அணியில் புலவர் மருத்துவர் ப. மு. சொக்கலிங்கனார், புலவர் நா. இராசசேகரன், புலவர் நா. நவநீதகிருட்டிணன், புலவர் ச. சொ மாணிக்கம், புலவர் ம. இராசமாணிக்கம் என ஐவர் பங்கேற்றனர். இதில் அணித்தலைவர் இல்லை. . முதல் அணியின் முதல் பெயரினரிடம் ஒரு பக்க அளவில் அவர் பொருளில் சிறு கட்டுரை பெறப்பட்டது. அது மறு அணியின் முதற்பெயரினர்க்கு அனுப்பப்பட்டது . அவ ரிடம் மாற்றம் பெற்று முதல் அணி இரண்டாமவர்க்கு அனுப்பப்பெற்று மாற்றம் பெறப்பட்டு இவ்வாறே முந்திய கட்டுரைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கட்டுரைகள் பெறப்பட்டன. பதினோராவது புலவர் நிறைவேற்றி எழுதி னார் . அனைத்தும் நடுவர்க்கு அனுப்பப்பட்டு அவர்தம் தீர்ப்பைப் பெற்று மலரில் பதிப்பிக்கப்பட்டன.