பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் | 267

மதுரை தியாகராசர் கல்லூரி முதல்வரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலை வருமாயிருந்த முனைவர் நா பாலுசாமி அவர்கள் பல பட்டிமண்டபங்களில் நடுவராக அமர்ந்து இலக்கிய மெருகு டன் அழுத்தமூட்டிய கருத்துடன் பட்டிமண்டபப் பாங்கை ஊன்றியவர் சட்டமும், பயின்ற அடையாளம் அவர் தீர்ப்பிலும் சொற்போரிலும் பளிச்சிட்டதுண்டு.

பேராசிரியர் முனைவர் நமசிவாயம் அவர்கள் சிறந்த நடுவர் பட்டி மண்டபங்களில் மட்டுமல்லாமல் வழக்காடு மன்றங்களில் தன் முத்திரை பதித்தவர். தன்பேச்சில் தனி யொரு பாங்கு கொண்டு சிறந்தவர். மிகு எண்ணிக்கையில் நடுவராக அமையாது போயினும் நடுவர் தகுதியேற்று அதற்கு உயர்வு தந்தோர் பலர்.

திருக்குறளார் முனிசாமி அவர்கள் திருக்குறள் பொழி வின் சுனையூற்று. நகைச்சுவையில் சுளைச்சாறு, அவர்கள் நடுவர் பணி வாழ்க்கை நடைமுறைச் செய்திகளை நகைச் சுவையுடன் இழையோடச் செய்தது . போரிடுவோரைப் பாராட்டுவதும், நயமாகப் பகடி செய்வதும் இவர்களுக்குக் கைவந்தகலை.

பெரும்புலவராகவும் தேர்ந்த எழுத்தாளராகவும், தெளிந்த பொழிவாளராகவும் திகழ்ந்த திரு கி. வா. சகந் நாதன் அவர்கள் இருபொருள்பட நயங்கூறுவதில் இணை யற்றவர். அவர்தம் தீர்ப்பு பல சான்றுகளைக் காட்டுவது. கருத்து நழுவாத செம்பாகமான மொழிநடை கொண்டது.