பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால ஆட்சியில் பட்டிமண்டப விளைச்சல் [I] 269

தக்க சான்றுகளுடன் நடைமுறைக் கருத்துகளால் தீர்ப்பை

வலுவாக்குபவர். வழக்காடுமன்றக்கலையில் கைவந்தவர்.

முனைவர் சாலமோன் பாப்பையா பேராசிரியர்

சிற்பசபை முதலிய சிலர் நடுவராகப் பளிச்சிடுகின்றனர்.

அவ்வப்போது நேரும் வேண்டுதலுக்கேற்பப் பேரறிஞர்களும் நடுவராக அமர்ந்து சிறப்பித்துள்ளனர். இங்கு மிகுதியாக அறிமுகமாகிப் புகழ்பெற்றுள்ளோரைக் குறிக்கநேர்ந்தது.

நடுவரால் பட்டிமண்டபம் நற்படைப்பாயிற்று என்று துணிந்து குறிப்பிடலாம்.

சொற்போராளர்

பட்டி மண்டப நிகழ்ச்சியில் கருத்தை முன்வைத்துச் சொற்போரைத் தொடங்குபவரும், அதனை மறுத்தும் மாறிமாறியும் சொற்போரிடுபவரும் சொற்போராளர் ஆவர்.

மேலே நடுவர்களாகக் காணப்பட்டவர்களில் பலர் தொடக்கத்தில் சொற்போராளராகச் சிறந்தவர்கள்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக இன்றுவரை இக் களத்தில் இருப்போரும், தமிழ்நாடெங்கும் பரவலாகப் பட்டி மண்டபச் சொற்போராளராக அறிமுகமாகிப் பெயர்ரெடுத்துள்ளவர்களுமே இங்குக் குறிக்கப்படு கின்றனர்.