பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 | பட்டி மண்டப வரலாறு

மெருகேற்றிச் சிறப்பித்துவரும் மகளிர், பட்டிமண்டப அரசியராகவும் திகழ்கின்றனர்.

திருமதி காந்திமதி, முனைவர். சரசுவதி இராமநாதன் எதிரும் புதிருமான இரட்டையர். அறுப துகளில் களத்தை ஆட்கொண்டவர்கள் . இவர்கள் கண்ணகியின் வீர வழக் காடலையும் மாதவியின் யாழ்ப்போரையும் கொண்ட வர்கள் . அவையோர் ஆரவாரத்தோடு சுவைக்கத் துண்டு பவர்கள் இடையிடையே இசையின் மெருகால் மேவும் போது முனைவர் சரசுவதி இராமநாதனை வெட்டொன்று துண்டிரண்டாப் வினாவை ஏவி அவையோரைத் திசை திருப்பும் வல்லமை படைத்தவர் திருமதி காந்திமதி.

தொடர்ந்து திருமதி உமையாள்முத்து, திருமதி சொல் விளங்கும் பெருமாள், செல்வியாகத் திகழ்ந்த அருண்மொழி, இக்காலத்தில் இளம்பிறை, முனைவர்சாரதாநம்பியாரூரன், நாகைப்புலவர் மணிமேகலை என்று பட்டியல் நீண்டு வருகிறது. பட்டி மண்டபக் களத்தை இல்லத்தரசியார் ஆட் கொண்டு வருகின்றனர்.

பொற்காலப் பயன்கள்

பொற்காலம் என்று சிறப்பிக்கப்பட்ட கால விளைச் சலில் பயன்கள் பல அரிய கருத்துகள் வெளிப்பட்டன. ஆய்வுக்கருத்துகள் முடிவு காணப்ப்ட்டன. புதிய கருத்துகள் மலர்ந்தன. புதிய கருத்துகள் அனைத்து வாழ்வியல், அரசியல், அலுவலியல், உளவியல் முதலியவற்றிற்கு வழி

ாட்டி அரண்கோலின. ஒன்றைச் சுட்டலாம் சான்றாக