பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ) கதிர் விளைச்சலில் பதர் கிளைத்தது

பட்டி மண்டபப் பொருள்கள் இலக்கியத்தில் தொடர்ந்தபோது சில புதுக்கருத்துக்கள் வெளிப்பட்டன. சமயத்தில் தொடர்ந்தபோது அவ்வச்சமயத்தார்தாமாகவே தம் சமயக் கருத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். சமயப் பட்டிமண்டபங்களிலும் சமயக் கோட்பாடுகள் அன்றிப் பொதுக் கருத்துக்கள் இடம் பெற்றன. அண்மையில் கோவையில் நடந்த இசுலாமியப் பட்டி மண்டபப்பொருள் இசுலாமிய வளர்ச்சிக்கு முதியோர் தொண்டு சிறந்ததா? இளைஞர் தொண்டு சிறந்ததா என்று அமைந்தமை ஒரு சான்று கருத்துப் பொருள்கள் சமுதாய வாழ்வியலைக் கொண்ட போது மக்கள் அறிவிற்கும் நினைவிற்கும் தீனி கிடைத்தது. • -

“வார்த்தை கத்தும் வாதியர்”

கருத் து மேடை கவர்ச்சி மேடையானபின் கேட் போரைமட்டுமன்றிப்பேசுவோரையும் தூண்டியது. பேசும் ஆற்றலுள்ளோர், நூல்களைக் கற்றோர், பட்டறிவுள்ளோர். கருத முனைவோர் முதலிய இன்னோர் அல்லாமல் மேடைக் காதல் கொண்டோர் பட்டி மண்டபத்தைக் கவ்வினர் இன்னோர்க்குத் தகுதி உர்த்தகுரல்'ஒன்றாகவே முடிந்தது.