பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ) பட்டி மண்டப வரலாற்றுப் பதிவுகள்

தமிழில் அளவை நூல்

தமிழில் தருக்க நெறி நூல் அளவை நூல்’ எனப்பட்டது . தமிழில் அளவை நூல்கள் இருந்தன. அனலுக்கும் புனலுக்கும் அந்துக்கும் செல்லுக்கும் உணவானவற்றில் அளவை நூலும் சிற்றுண்டியாயிற்று. “ஆற்றின் அளவு அறிந்து கற்க என்று குறள் காட்டும் குறிப்பில் அளவை நூல் பெயரை அறிந்தோம் . மணி மேகலை வைதிக மார்க்கத்து அளவை வாதியை” என்று அளவையை நினைவுபடுத்துகிறது. அளவைநூல் என்னும் பெயரில் ஒரு தமிழ் நூல் இருந்ததை உரையாசிரியர்கள் குறித்தனர் . இந்நூல் கட்டளைக் கலித்துற்ை என்னும் யாப்பில் அமைந்ததாகப் பதிப் புச் சான்றோர் உ. வே. சா. அவர்கள் குறித்தார்கள்.” கட்டளைக் கலித்துறை இடைக்காலத்தில் கிளைத்தயாப்பு. எனவே, இந்த அளவை நூல் இடைக்காலத்தில் எழுந்ததாகும் எவ்வாறாயினும் தொல்காலம் முதல் இடையிட்டு இடையிட்டு அளவை நூல் தமிழில் இருந்ததை அறிகிறோம்.

பிற மொழி அளவை

தமிழ் மொழியின் அளவையியலும் நூல்களும் இருந் தமை போன்று தொன்மை மொழிகளான வடமொழியாம்