பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 13

‘என் காதலியின் கூந்தல் மணத்தைப் போன்ற மிகு மணமுடைய மலரை நீ அறிவாயோ என்பது . இவ்வாறு காதலன் வண்டை வினவுவதாக இறையனார்’ என்னும் புலவர் எழுதினார். இதுகொண்டு எழுந்ததாக ஒரு நிகழ்ச்சி புலவர்களால் பேசப்பட்டது. அது கதையாக உருவாகி தருமி என்னும் எளியவனுக்கு உதவ இறைவனாம் சிவனே அப்பாடலை எழுதி விடுத்ததாகவும், அரசவையில் இப் பாடல் படிக்கப்பட அவையிலிருந்த நக்கீரர் என்னும் புலவர் மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் இல்லை என்று மறுக்க, இறைவனாம் சிவனே அரசவையில் தோன்றி வாதிட்டதாகவும் கதை எழுந்தது. வாதம் முற்றிய நிலையில்,

“கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்ட நக்கீரர், இந்திரனைப்போல உடம்பெல்லாம் கண்ணைக் காட்டினாலும் - “மொழிந்தனும் பாடற்குற்றம் குற்றமே.” என்று அடித்துச் சொன்னார்.

தம் கருத்தை நக்கீரர் எதிர்த்து அடித்துப் பேசி யதைச் சிவன் பொறாதவராக, தம் தீப்பிழம்பால் நக்கீரர்க்கு வெப்பு நோயை உண்டாக்கி ஒறுத்ததாகவும் கதை நீண் டது. இவ்வாறு திருவிளையாடற்புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் என்றொரு கதைப்பகுதியே அமைந்தது.

இவ்வாறு புராணத்தில் பதியப்பட்டிருப்பினும் சங்க காலத்தில் இவ்வாறே ஒரு நிகழ்ச்சி அமைந்ததற்கு வேறு