பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 15

இறைவனும் இறையனும்

இறைவனார், இறையனார் இரண்டும் ஒரே பகுதியில் அமைந்த வெவ்வேறு பொருள்தரும் சொற்கள்.

இறை + i + அன் இறைவன், இதில் இடையில் உள்ள ‘வ் எழுத்துப்பேறு.

இறை + ய் + அன்: இறையன், இதில் இடையில் உள்ள ‘ய்’ உடம்படுமெய்.

‘இறைவன்’ என்றால் கடவுள் தன்மையால் ஆன்மாக் களின் மூலத்தலைவன் என்னும் தகுதிக்கு உரியவன்.

‘இறையன்’ என்றால் மாந்தன் என்னும் தகுதியில் உள்ளவன். தலைமையல்லாத இடம் பெற்று வாழ்பவன்.

துறைவன், துறையன் என இரண்டு சொற்கள் உள்ளன . கடல் துறையின் தலைவன் துறைவன் . கடல் துறையில் வாழ்பவன் துறையன். இவைபோன்றே இை னாரும், இறையனாரும், -

இறைவன் - கடவுட்பெயர்

இறையனார். புலவர் பெயர்

இப்புலவர் பெயரைப் போன்று மற்றொரு சங்கப் புலவர் பெயர் நல்லிறையனார் இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தில் வாழ்ந்து அவனைப்