பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 17


கும் ஒற்றுமை ஏற்படுத்த மதுரைக் கடவுள் வந்து பாடினார்’ என்றொரு கதை எழாமற்போன வரை நலமே கடவுள் தொடர்பில் அவர் காட்டப்பெறவில்லை.

ஆனால், புலவர் இறையனார் பாடல் ஒருகற்பனைக்கு மூலமாக கொள்ளப்பட்டது ஏன்? ஏன் இப்படி ஒரு கற்பனை இவ்வாறு உயர்வுநவிற்சியாகவும், மிகை உயர்வு நவிற்சியாகவும் தொடங்கப்பட்டனவே புராணங்கள் ஆயின. இதன் நோக்கம் சமய நோக்கமே. சமயக் கடவுளரை வைத்து அவர் திறமையும், பெருமையும், பேரருளும் நலம் தரும் என்று மக்களுக்குக் காட்டவே இவ்வாறு செய்யப்பெற்றது . அதற்கு மக்கள் விரும்பிப் படிக்கும் அளவிற்கு ஆர்வமூட்டும் நோக்கத்தில் கவர்ச்சிகளும், கடவுள் அருளிப்பாடுகளும் முடிவில் கடவுள் உலகத்தை அடையலாம் என்பனவும் அமைக்கப்பெற்றன.

மேலே காணப்பெற்ற நக்கீரன், தருமி கதைக்கு முந்தையப் பாடல்களிலும், நூல்களிலும் எந்தச் சான்றும் இல்லை; ஒரு குறிப்பும் இல்லை என்பதையும் கருத வேண்டும்.

சார்வுச் சட்டகம்

இத்தொடர்பில் பட்டி மண்டப வரலாற்றிற்கு இந் நிகழ்ச்சி கொண்டு இவ்வாறு கருத்துக்களை வரிசைப் படுத்தலாம்.