பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 T பட்டி மண்டய வரலாறு

இலக்கணம் அவர் பெயரால் பனம்பாரம் எனப்பட்டது. அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. உரையாசிரியர் கள் காட்டியனவாகச் சில நூற்பாக்கள் கிடைத்துள்ளன . அவற்றுள் ஒன்று எத்துணை சிறந்த திறமை வாய்ந்த செயல் செய்தாலும் தான் தன்னைப் புகழக் கூடாது’ என்று சொல்கிறது. -

தோன்றா தோற்றித் துறைபல தான்றற் புகழ்தல் தகுதி யன்றே”

என்னும் நூற்பா இத்தற்புகழ்ச்சிக்கு இடங்களைக் குறிக்கிறது. அந்நூற்பா இது

“மன்னுடை மன்றத்து ஒலைத் தூக்கினும் தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு போதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தடும்புல வோர்க்கே”

இந்நூற்பாபனம்பாரம் என்னும் இலக்கண நூலில் உள்ளது - மயிலைநாதர்)

இந்நூற்பாவில் நாம் அடிக்கோடிட்டது.

“மன்னிய அவையிடை வெல்லுறு போதினும்” என்பதை அறிவுடைச் சான்றோர் பொருந்திய அவையில் அந்த அவை அரசவையாக இருப்பினும், புலவர் அவையாக இருப்பினும் கருத்து மாறுபாடு ஏற்பட்டு மறுப்பு.