பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 |- பட்டி மண்டப வரலாறு

பனம்பாரனாரை வழிமொழியும் திருவள்ளுவர்

மன்னிய அவையிடை வெல்லுறும்” என்னும் பனம்பாரனார் கருத்தை வழிமொழிவது போன்று திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” - என்றார் அவையில் ஒரு கருத்து வைக்கப்பெற்று அதனை மற்றவர் மறுக்கும்போது அதற்கு மாற்றம் கொடுக்கவேண்டும் இவ்வாறு மாறி மாறி மறுப்பும் மாற்றமும் கூறுவது தானே பட்டிமண்டபப் பாங்கு அது தான் அவையஞ்சா மாற்றம், அவ்வாறு மாற்றம் கொடுக்க முன்னெச்சரிக்கையாகக் கொள்ள வேண்டியதைத் திருவள்ளுவர்,

“ஆற்றின் அளவு அறிந்து கற்க"8 என்றார் . இதில்

‘அளவு’ என்றது அளவை நூலை அளவை நூல்’ என்பது பிற்காலத்தே தருக்க நூல் எனப்பட்டது அளவையை ஆங்கிலம் டOGC என்றும், தமிழில் முற்காலத்திலேயே கருத்துப் போருக்குரிய இலக்கணத்தை விதிக்கும் நூல் அளவை நூலாக இருந்தது என்று உணரலாம். வள்ளுவர் காட்டும் வெல்லும் நெறி

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான், அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரி து” என்னும் குறளில் இகல்வெல்லல்” என்பது கருத்து மாறுபாட்டால் ஏற்படும் இகலில் - மோதலில் போரில்