பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 | பட்டி மண்டப வரலாறு

பராசரன் பங்கு

புகார் நகரில்,

“வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன்” வாழ்ந்தனன் . அவன் நான்மறைக் கோட்பாட்டில் தேர்ந்த வன் நாவன்மை மிக்கவன் . அந்த வல்லமையை வலவை என்னும் சொல் குறிக்கின்றது. இக்காலத்திலும் பார்ப்பார் அகங்களில் திறமையாகப் பேசும் சிறுவரைச் சமத்து என்று வழங்குவதைக் கேட்கின்றோம் அது சமர்த்து என்பதன் திரிபு சமர் + துஎன்றும் சமர்த்து (சமர் போர்) போரிடும் வல்லமையைக் குறிக்கும் தமிழ்த் தாத்தா உ வே சா அவர்களும் இந்த வலவை என்பதற்குச் சமத்து’ என்று அடிக்குறிப்பு எழுதினார்.

இச் சமர்த்துப் பார்ப்பனனாகிய பராசரன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் “குலவுவேற் சேரன் கொடைத்திறம் கேட்டு அவனிடம் பரிசும் வரிசை யும் பெறச் சேரநாட்டிற்குப் புறப்பட்டான். காடும் நாடும் ஊரும் மலையும் கடந்து சேரநாட்டை அடைந்தான் அங்குள்ளோரைச்சொற்போருக்குஅறைகூவி அழைத்தான்

மன்னன் அவையில்,

‘நாவலம் கொண்டு நண்ணார் ஒட்டிப் பார்ப்பன வாகை சூடி"னான் 16