பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 41

என்றெல்லாம் கருத்துப்போர்க் குறிப்புகளைத் தந்துள் ளது . அக்குறிப்புக்களின் நிறைவாக, கருத்துப் போரிடு வோர் முன்னர் பேசும்போது கூறியவற்றில் ஏதும் அடிப் பட்டுப் போகும் கருத்து இருந்தாலும் அவை குறிப்பிடப் படாமல் விடுக்கப்படும்’ என்று கூறி,

வெல்லு மாயினும் மிகச்சிறப் புடைத்தே” என்று வெற்றியைக் குறித்துக் காட்டி நிறைவேற்றியுள்ளது . இப் பாடலில் கீழ்க்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை பட்டி மண்டப நல்லவையை அடையாளங் காட்டுகின்றன.

புல்லவை தீயவை குறையவை

மேலே குறிக்கப்பட்ட பாடலிலுள்ள “செற்றமும் சினமும் முனிவும் மூர்க்கமும்” உள்ளோர் அவையில் இருந்தால் அந்த அவை நல்லவை அன்று, அதனைத் திருவள்ளுவர் “புல்லவை (யுள் பொச்சாந்தும் சொல்லற்க 719) என்றார். முன்னுறையரையரும்"புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்து"என்றார்.

யாப்பருங்கலம் “அவையின் அமைதி” என்று குறித்ததற்குவிளக்கமாக அதன் விருத்தியுரைகாரர்,

அவையினது அமைதியும்’ என்பது அவையோரது தன்மை என்றவாறு அவை தாம் நான்கு வகைப்படும் என்று எழுதி இதற்கொரு பழைய பாடல் ஒன்றான