பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 [ ] பட்டி மண்டப வரலாறு

“வழிபட வல்லது அவை” 24 என்று அவைய முல்லையை நிறைவேற்றியுள்ளது. நிறைந்த இந்த அவை யோர் வழிபடத்தக்கவர் என்றது பெருமைக்குரியதாகும்.

வழிபடத்தக்கவராம் இவ்வவைச் சான்றோர் பெருந் தன்மைக்கு இருப்பிடமானவர் புலமைத் திறத்தில் தன் முனைப்போ தற்புகழ்ச்சியோ கொள்ளாதவர் தாம் கடுஞ்சொற்களால் தாக்கப்படினும் தகவை இழக்காதவர்.

அவையோர் சான்றோர் . சில இடையூறுகளைக் கருத்தில் கொள்ளாதவர் . பெருந்தன்மையின் பிறப்பிட மானவர். ஓர் எடுத்துக்காட்டு :

“எய்தி இருந்த அவைக்கண் சென்றுஎள்ளி வைதான் ஒருவன் ஒருவனை - வைய வயப்பட்டான் வாளா இருப்பனேல், வைதான் வியத்தக்கான் வாழும் எனில்’

என்னும் நாலடிப்பாட்டு ஏச்சில் அகப்பட்டவன் பெருந்தன்மையுடன் வாளா இருப்பதைச் சுட்டுகிறது. இப் பெருந்தன்மையைக் கண்டும் ஏசியவன் உயிர் துறந்திருக்க வேண்டும் என்றது. இதன்மூலம் ஏசியவனின் நல்லுணர்வு இன்மையையும் காட்டியது.

பொதுவாக இவ்வாறெல்லாம் கூறப்பட்ட அவை இலக்கணங்கள் பட்டிமண்டப அவைத்தன்மைகளை உள் ளடக்கியனவாகும்.