பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 45


(3) அவை நெறி

‘அவிநயம் என்பது ஒரு பழைய நூல் . அதனை எழுதியவர் அவிநயனார். அதுஅவையில் புகும் நெறிகளைச் சொல்லியுள்ளது. அவையில் புகுதற்கும் பேச எழுவதற்கும் நெறிகளை வகுத்துள்ளது. இந்நெறிகள் ஆராய்ந்து காணப் பட்டவை’ என்கிறது அந்நூல்.

“அவைபுகுநெறியே ஆயுங்காலை” என்று தொடங்கும் அந்த நூற்பா

  • அவையில் கூறவேண்டியவற்றை அவையில் புகும் முன்னரே ஒர் ஒழுங்கு வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பேச எழும்போது இருவரும் ஒன்றாக எழக்கூடாது.

புகுந்தவன் கருத்து தோல்வியுறுதலும் உண்டு. இந்த உண்மையையும் எதிர்பார்த்தே புகவேண்டும். * ‘இருவரும் கூடி உடம்பட்டு” நிறைவு பெற வேண்டும். இதனையும் முன் எண்ணமாகக் கொள்ள வேண்டும்.

இந்நான்கு கருத்துக்களை,

தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர்”

என்று நிறைவேற்றுகிறது. இந்த நூற்பா.