பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 47

(4) தலைவர் ! நடுவர்

அவையை நெறியாக நடத்திச் செல்லும் சான்றோராக அமைபவர் தலைவர் ஆவார். பண்டை இலக்கியங்களிலோ, இலக்கணங்களிலோ தலைவர் என்னும் சொல் அவைத் தலைவரைக் குறிப்பதாக இல்லை தலைமைக் கடவுளர் மூவரைக் குறிக்கவும், அரசவைத் தலைமை கொண்ட அரசனையும், காதல் தலைவனையும் குறிக்கவுமே ஆளப் பட்டுள்ளது. அவைத்தலைவர் பிற்காலத்தில் தோன்றியது.

இதுபோன்று நடுவர் என்பதும், இஃதும் இருவர் கூறும் வழக்குகளைக் கேட்டுக் குற்றத்திற்கு உரிய தீர்ப்பு கூறுபவரையே குறிப்பதாகப் பிற்காலத்தில் தோன்றியது. இச்சொல்லமைப்பும் இலக்கிய ஆட்சியில் இல்லை. ‘நடுவணன்’ என்றொரு சொல் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் நின்ற குழந்தையைக் குறிப்பதாகவே (ஐங் 401) உள்ளது. இச்சொல் நின்ற இடத்தால் அமைந்தது.

இரண்டு கருத்துக்களுக்கு நடுவே நின்றவரை “நடுவு நின்றார்” என்று திருமூலர் பாடினார் நடுவர் என்னும் சொல்லமைப்பு இல்லை . ஆயினும் நடுவர்க்குரிய நடுவு நிலைமை கொண்டு நடுவு + அர் = நடுவர் என்னும் சொல் அமைந்தது.

நடுவுநிலைமை கொள்ளும் நடுவர், சான்றோர் ஆவர். “ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி” என்ற திருவள்ளுவர் நடுவராக அமர்வதன் முன்னர் இரு கருத்துக்