பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 51

எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடற்சூது வெல்லுங் கொடி’ என்றான்”

என்று பாடி எருதின்மேல் ஏறிப் புட்கரன் என்ற மன்னன் அறைகூவலாகக் கொடி பிடித்து வந்ததைப் பாடினார். அதிவீரராமபாண்டியரும் தம் நைடதத்தில் 34 இவ்வாறே பாடினார்.

இவ்வாறெல்லாம் பட்டிமண்டப அறைகூவல், குரல் மூலமாகவும் கொடி மூலமாகவும் நிகழ்ந்தது. (6) மறுப்பு மாறிமாறிப் பேசுதல் (வாதம்)

கருத்தை முன்வைத்தல் மறுப்புரைத்தல் இருவரும் மாறி மாறிக் கருத்துப் போரிடல் பட்டிமண்டப நிகழ்ச்சி யின் உயிரோட்டமாகும் இவ்வாறு இருவர் இடம்பெறு தலை முன்றுறையரையனார் தம் பழமொழியில்,

“துள்ளி இருவர் தொடங்கிய மாற்றத்தில்’5 என்று இருவர் அவையில் பொருந்தி மாறுபட்டுப் பேசுவதைக் குறித்தார்.

இதற்கு முந்திய அவிநய நூல்,

“இருவரும் புகார் ஒருவர் முன்புகில் இருவர் அவையில் புகுவதனைக் குறித்துள்ளது.

இதுபோன்று மாறுபட்டுக் கருத்துப்போரிடுவோர் இருவருள் ஒவ்வொருவராகப் பேசவேண்டும் இருவரும்