பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 53

இது வாதிடுபவன் உணர்ச்சியில் நின்று பேசியதைக் குறிக்கிறது. உணர்ச்சிக்குறியாக மட்டும் அன்றி அவன் வெற்றிபெறும் குறியாகவும் அமைந்தது.

இக்காலத்து வெற்றிக்குறி V என்னும் ஆங்கில எழுத்துப்போல இரண்டு விரல்களை உயர்த்துவதாக உள்ளது. இதனை vovictory என்கின்றனர். சங்கஇலக்கியக் கருத்தின் தொடர்ச்சி இவ்வாறு ஆகியமைபோன்றுள்ளமை தமிழுக்கு ஒரு பெருமையேயாகும்.

இவ்வாறு கருத்தை அறைகூவித் தொடங்குகின்றவன் வாதி என்றும் மறுப்பவன் பிரதிவாதி என்றும் இன்றும் அறமன்றப் பெயர்களாக நிலவுகின்றன.

இங்கு'வாதி என்னும் சொல் பற்றி அறிதல் வேண்டும். உரையாசிரியர் நச்சர்

“வடவெழுத்தான் இயன்ற வடசொல் இதைந்துவரினும்” என்றும்,

“வாதியன்ன - சான்றோர் செய்யுட்கள் சிதைந்த வந்தன” என்றும் வடசொல்லாகக் காட்டினார்.

வாதி என்பது தமிழ்ச் சொல் என்பதற்கு ஒருவழியில் கரணியம் உண்டு. -

“வாதத்தான் வந்த வளிக்குதிரை”