பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 57

அவையறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும். (7:1)

அவையஞ்சா மாற்றம் கொடுப்பதற்கு அளவை நூல்களைக் கற்கவேண்டும் (725) செய்வனவற்றை இடைதெரிந்து சொல்லத் தெரிய வேண்டும் (7.12)

சான்றோர் சொல்லும்போது அவர்க்கு முந்திக் கொண்டு சொல்லக் கூடாது (7.15)

அறிவுசான்ற ஆன்றோர் முன் அறிவுஒளியுடன் பேச வேண்டும் (714)

அறிவற்றவர்முன் அவர்போன்றே நடந்துகொள்ள வேண்டும் (714) -

அவையில் புல்லரும் இருப்பர் அந்த அவையில் மறந்தும் உயர் கருத்தை வைக்கக் கூடாது (779)

தம் கருத்தை ஒட்டிப் பேசும் திறன் அற்றவரைத் துணைப்பேச்சாளராகக் கொள்ளக்கூடாது (720)

அவைக்கு அஞ்சக்கூடாது.

- இவையாவும் திருவள்ளுவர் அறிவுரை.

பின்னர் உரைக்க வேண்டிய நிலையில் முன்னர் உரைத்தால் மறுப்போர் வினா அறியாததால் உரிய விை தெரியாமல் பேச நேரும் அது முழங்கால் முறிவிற்கு மூக்கி கட்டுப்போடுவதுபோன்றதாகும். (பழ-23)