பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 59


கேட்கப்படும் . அப்போது நடுவனாகிய மன்னன் தனக்கு

வேண்டியவர் பக்கம் சாயலாம், அஃதாவது வாரம்’ படலாம்.

“வேந்தன் ஒருவர்க்கு வாரம் படினும் தாம் தாம் ஒருவர்கண் பாங்கு படாமல் ,42

அரசனென்று பாராமல் கருத்தைக்கூறினர். அவ்வாறு சான்றோர் அவையை நேர்மையாக்கினர். எனவே, பட்டிமண்டபத் தீர்ப்பிற்கு அவையோர் கருத்தும் இடம் பெற்றதை அறியலாம்.

(9) முடிவு தீர்ப்பு

பட்டி மண்டபத்தின் நிறைவும் பயனும் முடிவாகச் சொல்லப்படும் தீர்ப்பால்தான் அமையும் . அது நடுவு நிலையாக அமையவேண்டும் தீர்ப்புக் கூறும் ஆய்வாக ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில் அவையமுல்லை என்றமைத்து விளக்கியன இங்கும் கருதத்தக்கன.

“நவை நீங்க நடுவு கூறவேண்டும்” அதற்குக் கருத்துப் போராளர் கூறிக்கொண்ட தடைகள் விடைகள் எனும் இவற்றை முறையாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தடைகள் விடைகள் அடிபட்டுப் போகாமல் கருத்தில் கொள்ளப்படவேண்டும். அவற்றிலும் தடைக் கருத்துக்கள் அடிபட்டுப் போகும்படி அழிமுறை கொள்ளக்கூடாது.