பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி - 623206 குன்றக்குடி அடிகளார் ப. மு.தே. மாவட்டம் தொலைபேசி குன்றக்குடி 9227

அணிந்துரை

‘கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் நல்ல தமிழறிஞர், ஆய்வாளர் அவர் ஆய்வு செய்து எழுதிய பட்டி மண்டப வரலாறு என்ற நூலைப் படிக்கும் இனிய வாய்ப்புக் கிடைத்தது பட்டி மண்டபம் தோன்றி வளர்ந்த வரலாற்றைத் தெளிவாக அருமையாக எழுதியுள்ளார். வழக்கம் போல அவருக்கேயுரிய இனிய, எளிய, ஆற்றொழுக்கான தூய தமிழ் நடை நூலுக்குரிய மதிப்பைக் கூட்டியிருக்கிறது. பலப்பல நூல்களைப் படித்தும், நாட்டின் நடப்புக்களை அறிந்தும் நூலை எழுதியுள்ளமை நூலாசிரியரின் கடின உழைப்பைப் புலப்படுத்துகிறது. தமிழார்வலர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

நூலாசிரியர் பட்டிமண்டபம் என்ற பெயர் பட்டிமன்றம் நடக்கும் இடத்தையும் பட்டிமன்றம் என்பது விவாதம் நடக்கும் அவையையும் குறிக்கும் என்று துறைபோக ஆய்வு செய்து நிலை நாட்டியுள்ளது அருமையிலும் அருமை இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடு புரியாமலே இதுவரையில் இருந்து வந்தது. சங்ககாலப் பட்டி மண்பங்களில் பெருமை, பெருந்தன்மை கருத்து, நோக்கம், பண்பாடு இருந்தன சமயப் பட்டிமண்டபங்களில் இவையனைத்தும் சிதைந்தன என்று ஆசிரியர் கூறுவது சிந்தனைக்குரியது. பழைய பட்டி மண்டபங்களுக்கு ஆக்கல் உள்ளிடு வரவர மாறியபின் பிற்காலப் பட்டி மன்றம் சிதைத்தல் உள்ளீடு கொண்டதாயிற்று” என்ற நூலாசிரியர் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை

vii