பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 63

-

இதிலிருந்து விடுபட்டதன்று திருமாலியப் பெரியார் இராமானுசரும் -

“வாதில் வென்றான் எம் இராமானுசன்” என்று போற்றப்படும் அளவு வாதம் செய்தவர்.

சமணர்க்குத் தருக்கச் (வாதச்) சமணர்” என்றே அடைமொழி உண்டு புத்த சமயக் குண்டலகேசி வரலாறே வாத வரலாறுதான். சைவச் சான்றோர் திருஞானசம்பந்தர் “வாது செய்யத் திருவுள்ளமோ” என்று சிவனையே வேண்டி இசைவு பெற்று வாது செய்தவர்.

எனவே, தமிழ் மண்ணில் நால்வகைச் சமயத்தாரும் பிணக்க வாத வரலாற்றிற்குள் அடங்கியவர்கள் ஆயினர்.

சங்க காலத்தில் இச்சமய வாதப்போர் துவங்கி இருக்கலாம் என்று நச்சர் உரை கொண்டு முன்னர் காணப்பட்டது.

அதில்,

“எல்லாக் கலைகளையும் உணர்ந்த சீரியோர்”

என்றும்

“தருக்கங்களைக் கூறி” என்றும்

“பல சமயத்தாரோடு தம்மிற்றாம் மாறுபட்டுக்

கூறும் தருக்கத்தை” என்றும் கூறப்பட்டுள்ளமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் முற்காலச் சமயப் பட்டிமண்டபம்