பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொழிவு என்ற பகுதியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பலவற்றை எழுதியுள்ளார் சொற்பொழிவுத்துறை தமிழ் நாட்டிற்குரியது மட்டுமல்ல பழைய மரபினது என்றும் விளக்கி எழுதியுள்ள பகுதிகள் படித்துணரத்தக்கன சொற்பொழிவு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும், சொற்பொழிவின் பயன் குறித்தும் மேலைநாட்டு மேற்கோள்களையும் திருக்குறளையும் இணைத்து அற்புதமாக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுரை கூறு வது போன்று எழுதியுள்ளார்.

“சொற்பொழிவில் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும். ஒன்று. விளக்கமாக கருத்துச் சொற்கள் (தகை - தக்க சொல் இரண்டு கேட்கும் மக்களது மனத்தைத் தொட்டு இழுத்தல் (பிணித்தல்) மூன்று மக்களுக்கு ஆர்வத்தை ஊட்ட வேண்டும் (வேட்ப மொழிதல்) என்று கிரேக்க நாட்டு அறிஞர் கியும் டிலியின் கூறியுள்ளதனை

கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்”

என்ற திருக்குறளோடு ஒப்பு நோக்கி எழுதியுள்ள பகுதி ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக் காட்டு

“எது செயலைத் துண்டுகிறதோ, அது சிறந்த பேச்சு’ “நாம் சொற்களால் மக்களை ஆள்கின்றோம்’ என்ற எடுத்துக் காட்டுக்கள் இன்றைய சொற்பொழிவாளர்களுக்கு மிகவும் தேவையான அறிவுரை

பட்டி மண்டபம் என்பது தமிழ்ச் சொல் தமிழுக்கே உரிய சொல் என்ற முடிவு வரவேற்கத் தக்கதே

இந்நூலில் சங்க காலம் முதல் இன்று வரை நடந்து வந்துள்ள

பட்டி மன்றங்களின் வரலாறு கால நியதிப்படி முறையாக எழுதப் பெற்றுள்ளது காரைக்குடி கம்பன் விழாப் பட்டி மன்றம். தமிழுக்கே

yii;