பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கம் |- 71 கும் ப பங்கும

பெற்ற வாத வெற்றிச்சின்னமாம் கொடி குடை முதலிய விருதுகளுடன் புகுந்தார் . அவ்வூரின் அண்மையிலுள்ள புத்தமங்கைப் புத்தர்கள், புத்தநந்தி என்னும் தலைவனுடன் எதிர்த்தனர் . எம்மை வாதில் வென்றே வெற்றிச் சின்னத் துடன் புகவேண்டும் என்றனர். -

சம்பந்தர் பாடல்களை ஏட்டில் எழுதிவரும் சம்பந்த சரணாலயர்’ என்னும் அவர் மாமன் வாதிட முன்வந்தார். வாதம் நிகழவில்லை. ஒறுத்தல் தான் நேர்ந்தது. சம்பந்தரின்,

“புத்தர் சமண் கழுக்கையர்” என்று தொடங்கி அத்திர மாவது (பகைமாய்க்கு படையாவது) அஞ்செழுத்துமே (நமசிவாய) என்ற பாடலைப் பாட

“உரும் (இடி) இடித்துவிழ. . . . . தலையும் மெய்யும்

அற்றுவிழ அத்திரவாக்கதனால் அறுத்ததுவும்”

என புத்தநந்தி தலை அறுபட்டுமடிந்தான்.

இங்கு முன்கண்ட ஒன்றைப் பொருத்திக் காண

வேண்டும். வடபுலத்தில் யக்ஞவல்கியன் தன்னை எதிர்த்து வாதிட்ட கார்க்கிக்கு அடுத்து வினவினால் தலையறுந்து வீழ்வாய்’ என்றானே அதைப் போன்ற ஒறுத்தல் இது அவள் மந்திரத்தால் அன்று, உடன் வரும் அடாவடிகளால் தலைஅறும் என்றதைக் கண்டோம் . இஃது எப்படி அறுந்ததோ? இங்குத் தலை அறுந்து விழும் வாத ஒறுத்தல் நெறி ஒத்துவருகின்றது.