பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 73

சிவபெருமான் “சமயக் கடவுளரில் யானே வல்லேன்” என்று அறைகூவிக் கொடி நாட்டியுள்ளார் என்றார் . அதனால், ‘நீரும் திருநீறுபூசுக என்றார்.

அவையிலிருந்த புத்தத் தலைவர் யான் தில்லை சென்று சிவன் அறைகூவலை ஏற்று,

“நீறும் கொடியும் ஈங்கறுப்பேன்”

என்று கூறித் தில்லை வந்தான். பொன்னம்பலக் கோயில் புகுந்து தில்லை வாழ் அந்தணரிடம் அறைகூவலை ஏற்ப தாகச் சொல்லி,

“மிக்க திறல் மன்னவரும் மெய்வுணர்விளோரும்

தொக்க சபை முன்னர் நமதர்க்கவுரை சொல்வோம்.

“தீர்ப்பால் வென்று பொன்னம்பலத்தில் புத்தர் சிலையை நிறுவுவேன்’ என்றான். -

தில்லைவாழ் அந்தணர் சோழ மன்னருக்கு )ே அறிவித்து வரச் செய்தனர் . இலங்கை மன்னனும் தன் மகனின் ஊமைத்தன்மையை வெல்வாரைக் கொண்டு தீர்த்துக்கொள்ள வந்தான்.

சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர் கனவில் தோன்றி ஊருக்கு வெளியே உள்ள மாணிக்கவாசகரைக் கொண்டு வாதிடச் செய்யுமாறு பணித்தார்.

மாணிக்கவாசகரும்,