பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் 77


பின் புத்தத் துறவினி ஆனாள் வடபுல ஆவணம் என்னும் நகரத்தில் சமனநாத குப்தனாரை வென்றாள். வாத அறை கூவலுக்கு நாவல் மரக்கொம்பைத் தழையுடன் பொது இடத்தில் நடும் முறை கொண்டவள் (இம்முறை பின்னர் விளக்கப்படும்) >

காம்பிலி நகரில் அரண்மனை முன் வளாகத்தில் நாவல் கொம்பை நட்டு அறைகூவினாள். இது மன்னனுக்கு அறிவிக்கப்பட்டுக் கோட்டை வாயில்கள் அடைக்கப் பட்டன. போக்குவரத்தெல்லாம் நின்றன.

அங்கு வந்த நீலகேசி அறைகூவலை ஏற்பதன் அறிகுறியாக நட்ட நாவல் கொம்பைப் பிடுங்கி எறிந்தாள். அறிந்த மன்னன் இருவரையும் அவையில் எதிர் எதிராக அமரச்செய்து வாதமிடச் சொன்னான். .

குண்டலகேசி இரண்டு விதிப்பைச் சொன்னாள்.

“வென்றார்க்கோர் விழுப்பொருளும் தோற்றார்க்கோர் பெருந்துயரும் ஒன்றாக”

உரைக்க வேண்டும் என்றான். அரசன் இசைந்தான்.

வாதமுறைப்படி சமயத் தலைவன் யார்? நூல் யாது? நூற்பொருள் எவை? பொருள்நடைமுறை என்ன? என்னும் நான்கு அடிப்படை வினாக்களை வைத்து வாதம் நடந்தது. இவை பற்றிய கருத்து விளக்கங்களுள் இடையிடையே பழிப்பதும், சாடுவதும், செற்றம் காட்டுவதும் இடம் பெற்றன. - -