பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றம்? ஒருவேளை வெறும் தத்துவ ஞானியாகவே தன்னை அவர் வெளிப்படுத்தியிருந்தால் பிளேட்டோவின் கனவை நிறைவேற்றியிருக் கலாம். யாரும் அவரை முழு பலத்தோடு எதிர்க்க வந்திருக்க மாட்டார் கள். ஆனால் தீண்டத்தகாதவனாக பிறந்து பிளேட்டோ வரையறுத்த தகுதியோடு இருந்ததால் கிளாக்கனின் கருத்துபடியே எல்லாம் நடந்து விட்டது. சாதி இந்துக்கள் அவரை தத்துவ ஞானியாக அரசியல் மேதையாகப் பார்க்காமல் தீண்டத்தகாதவராகவேப் பார்த்தார்கள்.

இதைப் போன்ற பின்னணியில்தான் பண்டிதரைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. தத்துவ ஞானியாகவும், அரசியல் மேதையாகவும் வாழ்ந்த அயோத்திதாச பண்டிதர் சமூக - அரசியல் களத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். அதனால் இந்த சமூகம் அவருக்கு ஒரு அரசனுக்குரிய இருக்கையைத் தர வேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் நன்றியுடனாவது நடந்து கொண்டிருந்திருக்கலாம். இந்த நன்றிகெட்ட சாதி இந்து சமூகம் செய்தது என்ன என்பது இப்போதும் வெட்ட வெளிச்சமானதுதான்.

இருந்தபோதிலும் பல்வேறு வகையில் புதைக்கப்பட்ட பண்டி தரின் கொடைகளைப் புறந்தள்ளாமல் அதை பயன்படுத்திக் கொண்டு வரும் சூட்சுமம் மட்டும் இன்றும் நின்றபாடில்லை. ஆனால் ஒரு மூர்க்கத் தனத்தோடும், கள்ள மெளனத்தோடும் அவரை எதிர்த்தே வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏன்?

-

கௌதம சன்னா / 10