பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இடஒதுக்கீட்டின்
தொடக்கம்


எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் விகிதாச்சார அரசியல் இருந்து வருகிறது. நம் காலத்தில் சமூக நீதி என்று பேசப்படுவது, விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்லது இடஒதுக்கீடு எனும் அரசியலின் வேறு சொற்களாகவும், தோற்ற மயக்கமாகவும் இருக்கிறது. அதனால் அதன் தோற்றுவாயையும், அடிப்படையையும் அறிந்து கொள்வதில் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இந்த சிக்கலை உருவாக்கியவர்கள் எப்படி பார்த்தாலும் தலித்துகள் அல்ல. காரணம் அந்த சிக்கலான இடத்தில்கூட அவர்கள் மறைக்கப்பட்டும். மறுக்கப்பட்டும் வந்துள்ளனர் என்பதால் நிலைமையை வேறுவிதமாக அணுக வேண்டியுள்ளது. அதாவது இடஒதுக்கீடு அல்லது விகிதாச்சாரம் எனும் சமூக நீதி கொள்கையின் தோற்றத்திற்கு மூல கர்த்தா யார்?

இது ஒரு சிக்கலான கேள்வி? விடை அளிப்பதற்கு காலச் செலவு பிடிக்கும் கேள்வியும் கூட.

விகிதாச்சார, ஒதுக்கீட்டு அரசியல் என்பது உடைமை சமூகம் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற ஒன்று. இதற்கான ஆதாரங்களை பண்டைய இலக்கியங்களில் ஏராளமாகப் பார்க்க முடியும், சொல்லப் போனால் பண்டைய சமூக வரலாற்றை தெரிந்து கொள்பவர் யாரும் இதிலிருந்து தான் தொடங்க வேண்டியிருக்கும். இந்தோ - ஆர்ய இலக்கியங்களில் ரிக் வேதம் தொடங்கி கெளடில்யம் மனுஸ் மிருதி என வளர்ந்து. கோயில்களில் காணப்படும் தற்கால கல்வெட்டுகள்வரை சான்றுகளைக் காணமுடியும் அதேவேளை, இன்றைக்கு நாம் காணும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவைகளில் காண முடியாது ஏனெனில், அதில் பார்ப்பனருக்கு முதலிடமும், தொடர்ந்து பிற சாதிகளுக்கான ஒதுக்கீடுகளும் இருக்கும். கூடுதலாக, பார்ப்பனர்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் ஏராளமாக காணமுடியும் எல்லோரும் உணர்ந்த இந்த சலுகையை திரும்பவும் விளக்குவது என்பது சலிப்பூட்டக்கூடிய அளவிற்கு அது நிந்தனைக்குள்ளாகியிருக்கிறது. எனினும்

11 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை